வசந்தகாலக் கவிதை

1. நிமிட சுகம்
    தொலைந்த மனம்
    வருடம்பல ஆனபின்னும்
    தேடுகிறேன்!
    தொலைந்துவிட்ட மனதையல்ல
    தொலைத்துப் போகும் நிமிடங்களை . . .


2. செடியைப் பிரிந்த
    மொட்டும் ஒருநாள்
    மலர்கிறது மனக்கிறது
    மலரின் மனதை யாரரிவார்


3. எங்கோ செல்வோம்
    எதையோ  செய்வோம்
    நமக்கும் தெரியாமல்
    நமக்கான  சில  ரசிகர்!
    உனக்கான என்னைப்போல்

8 Comments:

ப்ரியமுடன் வசந்த் said...

வலைத்தள பெயருக்கேற்ற டெம்ப்ளேட் நல்ல ரசனைங்க....

செந்தில்குமார் said...

வசந்த காலம் வந்து போகுது உங்கள் வரிகளில்

என் மொட்டை மாடி மழைநேரத்து மேகங்களை போல்

இங்கே செந்தில்குமார்.அ.வெ

மதுரை சரவணன் said...

அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்

துளசி said...

//ப்ரியமுடன்...வசந்த் said...
வலைத்தள பெயருக்கேற்ற டெம்ப்ளேட் நல்ல ரசனைங்க....//

நல்ல வேல ஒரு கமென்ட போட்டீங்க. நாம எழுதறது கம்மின்னாலும் டெம்ப்லேட்ட மட்டும் அடிக்கடி மாத்துற ஆளு. நேத்துதான் இந்த டெம்ப்லேட்ட மாத்தலாமான்னு ஒரு ஐடியா வந்தது. அதுக்குள்ள என்னோட ரசனை நல்ல ரசனைன்னு நீங்க சொல்லிடீங்க. இனிமே மாத்தரமதிரி இல்ல.

துளசி said...

//செந்தில்குமார் said...

வசந்த காலம்
வந்து போகுது...

என் மொட்டை மாடி
மழைநேரத்து
மேகங்களை போல்...//

கமேன்ட்லியே கவிதை எழுதறிங்களே செந்தில்குமார்!தங்கள் வருகை நல்வரவாகட்டும் .

துளசி said...

//மதுரை சரவணன் said...
அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்.

தங்களின் சமீபத்திய பதிவொன்றை படித்தேன். அதில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல்:

"நன்று, அருமை, வாழ்த்துக்கள், வளர்க, டமிழ் வாழ்க"

என்ற கமென்ட்கள் மட்டுமல்லாமல், வாசகர்கள் எத்தகைய கமென்ட்களையும் போட்டு ஒரு ஆசானாக என் பதிவுகளை திருத்தலாம்...

பனித்துளி சங்கர் said...

//////நிமிட சுகம்தொலைந்த மனம்வருடம்பல ஆனபின்னும்தேடுகிறேன்!தொலைந்துவிட்ட மனதையல்லதொலைத்துப் போகும் நிமிடங்களை . . //////

அனைத்து கவிதைகளும் அருமை அதிலும் இது மிகவும் புதுமை .

துளசி said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அனைத்து கவிதைகளும் அருமை அதிலும் இது மிகவும் புதுமை//

நன்றி சங்கர்.
தங்களின் வருகை ஒரு இனிமை...