| 1. எழுந்திரு மனிதா! எழுந்திரு மனிதா!! எதை நீ இழந்துவிட்டாய்? பணமும் பதவியும் உன்னை பிரிந்தால் நீயேன் வருந்துகிறாய்? உழைத்துக் கிடைத்த அறிவும் திறமையும் உன்னிடம் உள்ளவரை மனிதன் என்ற வார்த்தை போதும் மறுபடி உயர்ந்திடவே . . . பேரும் புகழும் மங்கிப் போனால் இருளிள் மூழ்குவதோ? நட்சத்திரமாய் மின்னும் இதுவே வாழ்கைச் சரித்திரத்தில். = = = = = = = = = = 2. எழுந்திரு! எழுந்திரு!! மனிதா எழுந்திரு!!! எதை நீ இழுந்துவிட்டாய்? எல்லாம் இருந்தும் எதையோ இழந்ததில் நீயேன் சோர்ந்துவிட்டாய்? உன்னில் கலந்த உணர்வுகள் எத்தனை ஒருகணம் எண்ணிப்பார் தளரா உள்மனம் விலகா உன்குனம் உன்னில் வெளிப்படுமே . . . தடைகள் ஆயிரம் தடுத்த போதும் உழைக்கத் தடையேது? எல்லாம் இங்கே முடிந்த பின்பும் முயற்சிக்கு முடிவேது. = = = = = = = = = = 3. மனிதா! மனிதா!! எழுந்திரு மனிதா!!! எதை நீ இழந்துவிட்டாய்? தடைகள் ஆயிரம் தாண்டிய பின்னே அனுபவம் பெற்றுவிட்டாய் இலக்கை வென்று சாதனை செய்தும் உழைக்கும் உன்னிடமே இலக்குகள் எல்லாம் படியாய் மாறி காலில் மிதிபடுமே . . . எல்லை என்று எதுவும் இல்லை வாகைச் சூரியனே தொடரும் இந்த வாழ்கைப் பயணம் வானம் நோக்கியதே. = = = = = = = = = = 4. மனிதா எழுந்திரு! மனிதா எழுந்திரு!! எதை நீ இழந்துவிட்டாய்? எல்லாம் இருந்தும் ஏனோ நீதான் உழைக்க மறந்துவிட்டாய் பினமெனும் பெயரை பெறுவதற்க் குள்ளே ஓய்வு பெறுவதோ? பினமாய் நீயும் மாறிய பின்னே உழைக்க நினைப்பதோ . . . இரண்டும் இங்கே அவசிய மில்லை சாத்தியம் இருக்குதோ? இருந்தும் ஏனோ மனிதா . . . மனிதா . . . சோம்பித் திரிகின்றாய். |
Showing posts with label உறங்காதே மனமே. Show all posts
Showing posts with label உறங்காதே மனமே. Show all posts
உறங்காதே மனமே
Subscribe to:
Posts (Atom)
