Showing posts with label குழந்தையும் தெய்வமும். Show all posts
Showing posts with label குழந்தையும் தெய்வமும். Show all posts

குழந்தையும் தெய்வமும்

4 Comments
எந்தன் மனதிலே
வாழ்ந்த இறைவனே
உன்னை அறிந்ததும்
என்னை பிரிந்ததேன்?

குழந்தை வயதிலே
என்னில் உறைந்தவன்
மனித னானதும்
என்னை மறந்ததேன்?

குழந்தை தன்மைகள்
என்னை பிரிந்ததும்
கடவுள் கூடவா
என்னை பிரிவது?

அன்பு செய்ததில்
அடிமை ஆனவன்
பக்தி கொண்டதும்
பரமன் ஆவதோ?

அழுது புலம்பினேன்
கருணை இல்லையோ
கடவுள் என்றதும்
கர்வம் ஏனடா???