Showing posts with label மனித தேசத்துக் கைதிகள். Show all posts
Showing posts with label மனித தேசத்துக் கைதிகள். Show all posts

மனித தேசத்துக் கைதிகள்

5 Comments
காடழிந்து நாடாய்ப்போன கலியுகத்தில்
பறவையும் மிருகமும் எங்கேயென்று
பணம் கொடுத்து பார்க்கச்சென்றேன் . . .

வண்ண வண்ண பறவையினங்கள்
வாழும் மரங்கள் வலைக்குள்ளே
வானுயற பறக்கத் தடையாய்!

கட்டுக் கடங்கா காட்டினங்கள்
மனிதன் கண்டு மகிழ்ந்தாட
கம்பி வேலியில் பத்திரமாய்!

விஷம் கக்கும் நாகஜீவன்
பெட்டிப் பாம்பாய் அடங்கிப்போக
கண்ணாடிக்குள் காட்சிப் பொருளாய்!

பாம்பின் உணவாய் வீசப்பட்டு
விதியா சதியா எனக்கதறும்
எலியின் மரணம் ஏலனமாய்!

இத்தனை இத்தனை கொடுமையையென்னி
யாரிடம் சென்று முறையிடவென்று
இறைவனைத்தேடி திருத்தலம் சென்றேன்

கருவறையென்ற கோவில் சிறைகளிள்
கல்லாய்ப்போன கடவுடளர் கூட
மனித தேசத்துக் கைதிகளாய்!!!