| தாய்மடி நினைவும் மாலைப் பொழுதும் இன்னும் மனதில் மறையலையே நிலவொளி இரவில் தெருவினில் தூங்கிய நினைவுகள் என்னில் நீங்கலையே கண்களிள் உதித்த காலைச் சூரியன் மனதினில் தினம்-தினம் உதிக்கிறதே நித்திரை கலைக்கும் அன்னை முத்தம் மரணம் ஏற்க மறுக்கிறதே என்பது வருட காலச் சுவடுகள் காற்றில் கரைந்து போனபின்னும் தந்தை அருகில் மழலை வயதின் கால்தடம் இன்னும் தொடர்கிறதே மனமே மனமே மனமே மனமே யாரிடம் என்ன கேட்பேனோ வாழ்வின் விளிம்பில் வாழ்ந்ததை நினைத்து உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே வசந்தம் நிறைந்த வாழ்கை பயணம் மறுமுறை ஒருமுறை துவங்கிடுமோ . . . |
Showing posts with label மரண சாசனம். Show all posts
Showing posts with label மரண சாசனம். Show all posts
மரண சாசனம்
Subscribe to:
Posts (Atom)
