யத்தனிக்கும் எதிர்காலம்

வாழ்வதாய் என்னி
வருங்காலத்தின் வரவைநோக்கியே
இறந்து கொண்டிருக்கிறது
நிகழ்காலம்.

இருந்தும்...

நிகழ்காலம் நிரந்தரமென்று
மணற்கோட்டை கட்டியதாம்
மரணத்தில் சம்பவிக்கும்
எதிர்காலம்.

ஆனால்...

காலத்தின் காலனாய்
நிகழ்காலத்தின் நிஜங்கலைப்போல்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
இறந்தகாலம்.

உணர்ந்தும்...

ஒரு சாதனை முயற்சியாய்
இறந்தகாலத்தின் எலும்பாகவாவது மிஞ்சிவிட
யத்தனித்துக் கொண்டுதானிருக்கிறது
எதிர்காலம்.

குறிப்பு: இந்த கவிதை உயிரோசை -ன் வாரத்தொகுப்பில் வெளியாகியுள்ளது.

1 Comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசித்தேன்...
வாழ்த்துக்கள்..