காடழிந்து நாடாய்ப்போன கலியுகத்தில் பறவையும் மிருகமும் எங்கேயென்று பணம் கொடுத்து பார்க்கச்சென்றேன் . . . வண்ண வண்ண பறவையினங்கள் வாழும் மரங்கள் வலைக்குள்ளே வானுயற பறக்கத் தடையாய்! கட்டுக் கடங்கா காட்டினங்கள் மனிதன் கண்டு மகிழ்ந்தாட கம்பி வேலியில் பத்திரமாய்! விஷம் கக்கும் நாகஜீவன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப்போக கண்ணாடிக்குள் காட்சிப் பொருளாய்! பாம்பின் உணவாய் வீசப்பட்டு விதியா சதியா எனக்கதறும் எலியின் மரணம் ஏலனமாய்! இத்தனை இத்தனை கொடுமையையென்னி யாரிடம் சென்று முறையிடவென்று இறைவனைத்தேடி திருத்தலம் சென்றேன் கருவறையென்ற கோவில் சிறைகளிள் கல்லாய்ப்போன கடவுடளர் கூட மனித தேசத்துக் கைதிகளாய்!!! |
மனித தேசத்துக் கைதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
உண்மை தான்
நீண்ட நாளுக்குப் பிறகு இடுகை
//கட்டுக் கடங்கா காட்டினங்கள்
மனிதன் கண்டு மகிழ்ந்தாட
கம்பி வேலியில் பத்திரமாய்! //
சரியாகச் சொல்லி இருக்கறீங்க...
இன்றைய நிலையிலிருக்கும் விலங்கினங்களை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க மனுசனுக்கும் ஒரு நாள் வரும் இது போல்..
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் நலமா?
//திகழ் said...
உண்மை தான்//
//Sangkavi said...
சரியாகச் சொல்லி இருக்கறீங்க...//
திகழும் சங்கவியும் சொல்லியாச்சி, அப்ப நாம சொன்னது சரியாதான் இருக்கும். நன்றி திகழ் மற்றும் சங்கவி.
//பிரியமுடன்...வசந்த் said...
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் நலமா?//
ப்ரியமுடன் இப்படி ஒருவர் நலம் விசாரிக்க இருக்கும்பொழுது எனக்கென்ன குறை வரப்போகிறது. நலம்தான் வசந்த். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்,நலமா?
Post a Comment