*மூரிதை - மூன்று வரிக் கவிதை 1. மரணம் நல்ல உறக்கம் நிலையாய் உறங்க . . . 2. அடக்கம் அடக்கமாய் இரு அறநெறி காக்கஅடங்கிப் போகாதே . . . 3. காதல் கவிதைகள் பிறக்கும் காதல் செய்தால் கடமைகள் மறக்கும் . . . 4. முயற்சி முடிவிலே உணர்ந்திட்டான் முயற்சியே வெற்றியென்று முயலுகிறான் முயற்சிக்க . . . 5. தோல்வி உழைக்க மறந்ததை உணர மறுப்பதே உண்மை தோல்வியாம் . . . 6. புகழ் புகழொரு போதை புரியா மனமே பெருமை கொள்ளாதே . . . 7. பரிசு வாழ்கை போட்டியில் வெற்றியின் பரிசு வாழ்வின் மரணம் 8. ஏக்கம் கனவுகளிள் தொலைந்தவன் காலங்கள் மாறியபின் கனவுகளைத் தேடுகிறேன்9. நிகழ்வு நிகழ்ந்ததை நினைத்து நெகிழும் மனது நிகழ்வதை வெறுக்கும் தொடரும்... |
மூரிதை*
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
//முடிவிலே உணர்ந்திட்டான்
முயற்சியே வெற்றியென்று
முயலுகிறான் முயற்சிக்க . . .//
இதுதான் மிகச்சிறப்பான வரிகள் நல்லாயிருக்கு...
//பிரியமுடன்...வசந்த் said...
//முடிவிலே உணர்ந்திட்டான்
முயற்சியே வெற்றியென்று
முயலுகிறான் முயற்சிக்க . . .//
இதுதான் மிகச்சிறப்பான வரிகள் நல்லாயிருக்கு...//
நன்றி வசந்த்.
எல்லா வரிகளும் சிறப்பாக அமைய முயற்சிக்கிறேன்.
நச்சென்று உள்ளது
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
//திகழ் said...
நச்சென்று உள்ளது
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்//
நன்றி திகழ்.
என்னங்க இது, சுவாரஸ்யமா படிச்சிகிட்டு வந்தா தொடரும்ன்னுட்டீங்க. முயல்வதற்கு முயற்சிக்கிறேன் ரொம்ப ரசித்தேன்.
http://kgjawarlal.wordpress.com
//Jawahar said...
என்னங்க இது, சுவாரஸ்யமா படிச்சிகிட்டு வந்தா தொடரும்ன்னுட்டீங்க. முயல்வதற்கு முயற்சிக்கிறேன் ரொம்ப ரசித்தேன்.//
நினைவில் நின்றவை மனதில் தோன்றும்போது நிச்சயமாக இது தொடரும். அதனால அடிக்கடி நம்ம blog பக்கம் வந்துட்டு போங்க.
நன்றி Jawahar தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
[Comment From Original Post]
பிரியமுடன்...வசந்த் said...
// கவிதைகள் பிறக்கும்
காதல் செய்தால்
கடமைகள் மறக்கும் . . .//
உண்மைதான்...
//அடக்கமாய் இரு
அறநெறி காக்க
அடங்கிப் போகாதே . . .//
மிகச்சரி
[Comment From Original Post]
திகழ் said...
அருமை
[Comment From Original Post]
கேசவன் .கு said...
/// கனவுகளிள் தொலைந்தவன்
காலங்கள் மாறியபின்
கனவுகளைத் தேடுகிறேன் ///
அருமையான வரிகள் ! அழகு செய்கிறது.!!
Post a Comment