நித்திரை நினைவில் நீங்கா நிலவே நித்திரை கலைய மறுக்கிறதே . . . நித்திரை கலைத்த நின்னைக் கண்டதும் மலர்முகம் என்னில் பதிகிறதே . . . அழகின் விளக்கம் நீயே என்று உள்மனம் எங்கோ சொன்னதடி . . . உண்மை அறிந்திட ஆவல் கொண்டதும் இன்றும் கனவு கலைந்ததடி . . . கனவினில் கண்டவள் கண்களில் மலர்ந்திட காலம் எத்தனை காக்கனுமோ ! அழகிய அவளும் உண்மையில் இருந்தால் இறைவன் திறமையில் சிறந்தவனே !! |
கனவுக் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//அழகிய அவளும்
உண்மையில் இருந்தால்
இறைவன் திறமையில் சிறந்தவனே !!//
அது முடியாதே..
மற்றபடி ரசனையான கவிதைங்க...
//வசந்த் said...
ரசனையான கவிதைங்க...//
உங்களின் கருத்துக்கு நன்றி வசந்த்
Post a Comment