புல்லின் அசைவிலும் கவிதை படைத்திட கற்பனை அறிவின் உற்று நோக்கலால் கண்கள் மறந்த இயல்புப் பார்வை . . . இயற்கை படைப்பின் ஒவ்வொரு அனுவையும் ரசிக்கத் துடிக்கும் மனதை வென்று பதிவு செய்யப் பதறும் நினைவலை . . . ஆழ்ந்த அமைதியின் நிசப்தம் கண்டும் ஒளிந்து கிடக்கும் வரிகளைத் தேடி சலனம் கொள்ளும் இம்சை மனது . . . இரவுகள் எல்லாம் நிலவுடன் சேர்ந்து கவிதை எழுதி கவிதை எழுதி கணவுகள் தொலைத்த இரவுத் தூக்கம் . . . எத்தனை எத்தனை இழப்புகள் என்று அனுபவ அறிவை கடவுள் சொல்லியும் என்மனம் பணிவுடன் இறைவனைக் கேட்டது . . . இழப்புகள் ஆயிரம் இருந்த போதும் படைப்பால் அவனும் கடவு ளாதலால் நானும் ஒரு முறை கவிஞனாகவா??? |
கவிஞரின் வாழ்வில்...
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//ஆழ்ந்த அமைதியின் நிசப்தம் கண்டும்
ஒளிந்து கிடக்கும் வரிகளைத் தேடி
சலனம் கொள்ளும் இம்சை மனது . . .//
யெஸ்..
நன்றி வசந்த்.
Post a Comment