சிலைகளும் கடவுளும்

கல்லும் சிலையும் கடவுளை விஞ்சிய
கலியுகமென்று சிலைகள் நினைக்க . . .

கடவுள்:
கல்லாய்க் கிடந்து கலையாய் மாறிய
கர்வம் மனதில் நிறைந்து போனதோ
சிற்பியை வடித்த சிற்பி நானே
எங்கும் நிறைந்த இறைவன் ஆவேன்

சிலைகள்:
எங்கும் நிறைந்து என்ன புண்ணியம்
எத்தனை மனிதர் கடவுளை கண்டார்
ஓரிடம் அமர்ந்த எங்களைக் காண
கோடி மனிதரின் கூட்டம் பாரீர்...

கடவுள்:
கடவுளென்று எதையும் நம்பி
கல்லைக் கானும் மூடமனிதர்
கவலை தீரப் போவதில்லை
சிலையைக் கண்ட மாத்திரத்தில்
கடவுள் மட்டும் மறுத்துவிட்டால்

சிலைகள்:
கவலையை தீர்ப்பது கடவுளா???

ஓவியத்தில் உறைகின்ற உயிருணர்வு
ஒருங்கேநம் கருத்தினை கவர்வதுபோல்
சிலையுருவில் உறைகின்ற கலைவடிவம் (கடவுளல்ல)
காண்போரின் மனச்சுமையை கலைகிறது
கோயில்களின் கருவறையில் கடவுள்களாய்

கடவுள்:
????? !!!!! ?????

15 Comments:

சிவாஜி சங்கர் said...

கடவுள் = 0/0

ஜீவன்சிவம் said...

இங்கே கடவுளுக்கே ஆப்பா

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

vidivelli said...

very nice........
good.......

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

மதுரை சரவணன் said...

உங்கள் கவிதையில் கடவுளைக் காண்கின்றேன். அற்புதம்.

துளசி said...

thula

துளசி said...

//Sivaji Sankar said...
கடவுள் = 0/0 //

கடவுளுக்கே கணக்கு சொன்ன சிவாஜி சங்கருக்கு நன்றி.

ஆனால் கடவுளுக்கு முழு மதிப்பெண்கள் (100/100 என்பதைப்போல 0/0 மதிப்பெண்கள்)கொடுத்தது கொஞ்சம் அதிகம், குறைத்திருக்கலாமே...

துளசி said...

ஜீவன்சிவம் said...

இங்கே கடவுளுக்கே ஆப்பா

இங்க பரவாயில்லைங்க. நான் சொன்னது மட்டும் உண்மையாச்சின்னா கோயில்லையும் கடவுளுக்கு .....தான்.

துளசி said...

//அண்ணாமலையான் said...

நல்லாருக்கு//

நன்றி அண்ணாமலையான்.

துளசி said...

//vidivelli said...

very nice........
good.......//

Thankyou very much vidivelli.

துளசி said...

//கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...தொடருங்கள்...//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கமலேஷ். தொடர்ந்து வாருங்கள்

துளசி said...

//Madurai Saravanan said...

உங்கள் கவிதையில் கடவுளைக் காண்கின்றேன். அற்புதம்.//

கொன்னுட்டீங்க சரவணண். அற்புதம்...

நன்றி Madurai Saravanan தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Tamilthotil said...

கவலையை தீர்ப்பது கடவுளா???

ஓவியத்தில் உறைகின்ற உயிருணர்வு
ஒருங்கேநம் கருத்தினை கவர்வதுபோல்
சிலையுருவில் உறைகின்ற கலைவடிவம் (கடவுளல்ல)
காண்போரின் மனச்சுமையை கலைகிறது
கோயில்களின் கருவறையில் கடவுள்களாய்

கடவுள்:
????? !!!!! ?????

நீங்கள் எழுதி மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கவிதையை நான் படிக்க நேர்ந்தது. அருமை துளசி அவர்களே...
ஒரு கவிதை எழுதியவரின் எண்ணங்களை தாண்டி படிப்பவர்களின் சிந்தனையை கவித்துவமாக்கி அதில் இன்னும் பல கருத்துக்களை வளர்க்குமென்றால் அது காலத்தை தாண்டி நிறகும் கலையாக நிலைக்கும். நீங்கள் எழுதிய கவிதையும் அப்படித் தான் எனக்குத் தோன்றுகிறது.அந்த கவிதையின் பொருளும் அதைத் தான் உணர்த்துகிறது. கல்லை கடவுளாகப் பார்த்த மனிதனின் மனநிலை மாறிக் கொண்டுத் தான் இருக்கிறது.ஆனால் அந்த கல்லில் சிற்பியின் கலைத் திறமை தான் இன்னும் கடவுள் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அருமையான பதிவு
நேரமிருப்பின் என்னுடைய வலைப்பக்கத்திற்கு வந்து பார்க்கவும்
http://tamilraja-thotil.blogspot.com/