| நித்திரை நினைவில் நீங்கா நிலவே நித்திரை கலைய மறுக்கிறதே . . . நித்திரை கலைத்த நின்னைக் கண்டதும் மலர்முகம் என்னில் பதிகிறதே . . . அழகின் விளக்கம் நீயே என்று உள்மனம் எங்கோ சொன்னதடி . . . உண்மை அறிந்திட ஆவல் கொண்டதும் இன்றும் கனவு கலைந்ததடி . . . கனவினில் கண்டவள் கண்களில் மலர்ந்திட காலம் எத்தனை காக்கனுமோ ! அழகிய அவளும் உண்மையில் இருந்தால் இறைவன் திறமையில் சிறந்தவனே !! |
கனவுக் காதல்
கவிஞரின் வாழ்வில்...
| புல்லின் அசைவிலும் கவிதை படைத்திட கற்பனை அறிவின் உற்று நோக்கலால் கண்கள் மறந்த இயல்புப் பார்வை . . . இயற்கை படைப்பின் ஒவ்வொரு அனுவையும் ரசிக்கத் துடிக்கும் மனதை வென்று பதிவு செய்யப் பதறும் நினைவலை . . . ஆழ்ந்த அமைதியின் நிசப்தம் கண்டும் ஒளிந்து கிடக்கும் வரிகளைத் தேடி சலனம் கொள்ளும் இம்சை மனது . . . இரவுகள் எல்லாம் நிலவுடன் சேர்ந்து கவிதை எழுதி கவிதை எழுதி கணவுகள் தொலைத்த இரவுத் தூக்கம் . . . எத்தனை எத்தனை இழப்புகள் என்று அனுபவ அறிவை கடவுள் சொல்லியும் என்மனம் பணிவுடன் இறைவனைக் கேட்டது . . . இழப்புகள் ஆயிரம் இருந்த போதும் படைப்பால் அவனும் கடவு ளாதலால் நானும் ஒரு முறை கவிஞனாகவா??? |
தாயிடம் சில கேள்விகள்...
| என்னைப் பெற்ற அன்புத் தாயே! உன்னைப் போல பொறுமையும் உண்டோ ஒரு கணம் பொறுக்கா யெந்திர உலகில் என்னைப் பெறவே எத்தனை மாதம் ஏங்கி ஏங்கிக் காத் திருந்தாயோ? சகிப்புத் தன்மையின் உச்ச வரம்பே! சிறிது துரம் உடன் சென்றாலே சனியன் என்று சலித்துக் கொள்வர் என்னை உன்னில் எப்படி நீயும் சங்கட மின்றி சுமந்து சென்றாய்? மனதில் ஒளிரும் தியாகச் சுடரே! தன்னுயிர் காக்க மன்னுயிர் போக்கும் மூடர் நிறைந்த மனித உலகில் மரணம் மறந்து ஜனனம் கொடுத்து மெழுகாய் வாழ்வது உன் குனமோ? தன் னலமற்ற பெருந் தகையே! தனக்கென மட்டும் வாழும் உலகில் எனக்கென மனதில் ராஜ்ஜியம் அமைத்து ராஜா . . . என்று அழைக் கின்றாயே உன்னில் வாழ்வது நீயா நானா??? |
Subscribe to:
Posts (Atom)


