ஓ மனிதா...


உலகை வெல்ல ஒருவன் போதும்
துணையை ஏனோ தேடுகிறாய்!

துணைகள் இருந்தும் தோற்றுப் போனால்
தனிமையில் நின்று வாடுகிறாய்!!

வெல்லும் சக்தி உனக்கே சோந்தம்
பிறரை எதற்கு நாடுகிறாய்?

உதவிகள் இன்றியும் உன்னால் முடியும்
உழைக்க ஏனோ தயங்குகிறாய்...

உழைப்பைக் கொண்டு தடைகளை எல்லாம்
தகர்த்து எறிய முடியுமடா

புரட்சி செய்ய படைகள் அல்ல
போர்க்குணம் ஒன்றே போதுமடா!!!

4 Comments:

இய‌ற்கை said...

தங்களின் வலைப்பூ அறிமுகத்தை கீழுள்ள முகவரியில் தந்துள்ளேன்.வருகை தந்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்
http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_21.html

Eswari said...

நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள். அருமை.
அதிகமான எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே....

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்கு. எழுத்துப் பிழைகள் இல்லைனா, இன்னும் நல்லா இருக்கும்.

துளசி said...

ஈஸ்வரி மற்றும் விக்னேஷ்வரி அவர்களுக்கு நன்றி.

இனிவரும் காலங்களில் எழுத்துப்பிழை வராமல் எழுத முயற்ச்சிக்கிறேன்.