நீ மறுத்தால் யார் முடிப்பார்?

உன்னை வெல்ல ஒரு கூட்டம்
ஓயாதிருக்கும் உலகினிலே
ஓய்ந்து விடாதே சோர்ந்து விடாதே
உழைக்க மறந்து உறங்கிவிடாதே

கோடி மனிதரின் போட்டிக் கிடையில்
வெல்லத் தகுந்த ஒருவன் நீயே
உந்தன் வெற்றி களவு போவதை
பார்த்து இரசிக்கப் பழகிவிடாதே

கண்ணை மறைக்கும் பணி போல
பகைவர் கூட்டம் உனை சூழும்
பயந்து விடாதே பணிந்து விடாதே
பகலவன் நீயே மறந்துவிடாதே

இலட்சியப் பாதையில் தடைகள் ஆயிரம்
தாமதம் கண்டு தளர்ந்து விடாதே
முன்நாள் முயற்சியின் முடிவைக் கண்டு
தோற்றோமென்று துவன்டு விடாதே

'தோல்வி' யென்பது எதுவும் இல்லை
மீண்டும் முயலும் தருணம் ஒன்றே
முடிவென உலகில் ஏதும் உண்டோ
முதலும் முடிவும் மனதை பொறுத்தே!

2 Comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனை..

துளசி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல சிந்தனை..//

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.