மரண சாசனம்

தாய்மடி நினைவும்
மாலைப் பொழுதும்
இன்னும் மனதில் மறையலையே

நிலவொளி இரவில்
தெருவினில் தூங்கிய
நினைவுகள் என்னில் நீங்கலையே

கண்களிள் உதித்த
காலைச் சூரியன்
மனதினில் தினம்-தினம் உதிக்கிறதே

நித்திரை கலைக்கும்
அன்னை முத்தம்
மரணம் ஏற்க மறுக்கிறதே

என்பது வருட
காலச் சுவடுகள்
காற்றில் கரைந்து போனபின்னும்

தந்தை அருகில்
மழலை வயதின்
கால்தடம் இன்னும் தொடர்கிறதே

மனமே மனமே
மனமே மனமே
யாரிடம் என்ன கேட்பேனோ

வாழ்வின் விளிம்பில்
வாழ்ந்ததை நினைத்து
உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே

வசந்தம் நிறைந்த
வாழ்கை பயணம்
மறுமுறை ஒருமுறை துவங்கிடுமோ . . .

8 Comments:

அண்ணாமலையான் said...

அருமையா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

அழகா சொல்லியிருக்கறீங்க...

Unknown said...

நடத்துங்க

vidivelli said...

வாழ்வின் விளிம்பில்
வாழ்ந்ததை நினைத்து
உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே

வாழ்வின் விழிம்பில் நின்று தப்பிச்சிட்டீங்கதானே
இனியாவது எங்காதேங்க
உங்கள் கவிதை பிடிச்சிருக்கு.நன்று..நன்று
செம்பகம்

துளசி said...

//அண்ணாமலையான் said...
அருமையா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணாமலையான்.

துளசி said...

//Sangkavi said...
அழகா சொல்லியிருக்கறீங்க...//

நன்றி சங்கவி.

துளசி said...

//V.A.S.SANGAR said...
நடத்துங்க//

சங்கரே சொல்லியாச்சி, இனிமே நடத்திர வேண்டியதுதான்.

நன்றி சங்கர் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

துளசி said...

//vidivelli said...

வாழ்வின் விளிம்பில்
வாழ்ந்ததை நினைத்து
உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே

வாழ்வின் விழிம்பில் நின்று தப்பிச்சிட்டீங்கதானே
இனியாவது எங்காதேங்க
உங்கள் கவிதை பிடிச்சிருக்கு.நன்று..நன்று
செம்பகம்//

தப்பிக்கிறதா??? சாவும்போது (என்பது வயசுக்கு மேல)நம்ம மனசு எப்பிடி இருக்குமோன-னு ஒரு கற்பன பன்னி எழுதிட்டோம். உண்மையிலே தப்பிக்கிறோமா இல்லையா-னு சாவும்போது பாத்தாதான தெரியும்.

நன்றி செம்பகம் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.