கலியுகக் காதல்

காதலர் என்றால்
கணவன்-மனைவியோ
காதல் போர்வையில்
காமவேட்டையோ?

கட்டி பிடிப்பதும்
முத்தம் கொடுப்பதும்
காமம் அல்ல
காதலென்பதா?

கண்கள் கானா
காவியக்காதல்
கர்பம் கானும்
கலியுகக்காதல் . . .

இணைக்கும் பாலம் 
எங்கே தேட
இருளில் இருளின் 
தேடல் போல

உதடுகள் உரசி
உடலைத்தொடுகிற
வக்கிரம் மட்டும்
காமமல்ல

கண் பார்வையினாலே
தொடுவதும்கூட
காதல் அல்ல
காமமன்றோ

மனிதனின் மதியோ
மங்கிபோனதால்
மனதின் காதல்
மாண்டுபோதோ

கலியுகம் கானும்
காதலென்பது
நீரென ஓடும்
நெருப்புக்குழம்பே . . .

0 Comments: