சிந்தனைகள் சில

கடவுள்?
            ஓவியத்தில் உறைகின்ற
            உயிருணர்வு
            ஒருங்கே நம் கருத்தினை
            கவர்வதுபோல்
            சிலையுருவில் உறைகின்ற
            கலைவடிவம்
            காண்போரின் மனச்சுமையை
            கலைகிறது
            கோயில்களின் கருவறையில்
            கடவுள்களாய் . . .

    மனிதன்:
            சென்று வரும் மூச்சொருநாள்
            சட்டென்று நின்று விடடால்
            மாண்டுவிட்டான் என்று சொல்லி
            மறைத்திடுவர் மன்னில் தள்ளி
            உடன்  பிறந்த உடலழகும்
            உதவாத பொருட் டாகும்
            இதையறியா மனித இனம்
            அழிவதுஏன் தினம் தினம் . . .

    பாவங்கள்:
            "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6: 23)
            பைபிளின் சாரம் இதுவென்றால் . . .
            மறைந்த இயேசுவும் பாவிதானோ???

10 Comments:

துளசி கோபால் said...

உங்கள் பெயரைப்பார்த்து உள்ளே வந்தேன்.

பதிவுலகில் வந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்

தமிழ் said...

சிந்தனைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

/இதையறியா மனித இனம்
அழிவதுஏன் தினம் தினம் . /

என்பதை விட அழுவது ஏன் தினம் தினம் என்றால் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இது என்னுடைய எண்ணம். தவறு இருப்பின் மன்னிக்கவும்.


அன்புட‌ன்
திக‌ழ்

ப்ரியமுடன் வசந்த் said...

கேள்விகளும் கவிதையாய் நல்லாயிருக்குங்க..

சிவாஜி சங்கர் said...

//பாவத்தின் சம்பளம் மரணம்"

மறைந்த இயேசுவும் பாவிதானோ???//

சிந்திக்க வைக்கும் வரிகள்..

யாழினி said...

"இயேசு நாதர் பாவி இல்லை அவர் தன் மக்களின் பாவங்களுக்காக மரித்தார்"

ஆனால் உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை!

தமிழ் உதயம் said...

உலகிலே எல்லொருமே பாவிகள். கடவுளர்களும் விதிவிலக்கல்ல. மனிதனின் ஒவ்வொரு தவறுக்கும் இறைவனே காரணம். பிள்ளையின் தவறுக்கு தந்தையின் வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதில்லையா

துளசி said...

//துளசி கோபால் said...

உங்கள் பெயரைப்பார்த்து உள்ளே வந்தேன்.

பதிவுலகில் வந்தமைக்கு இனிய
வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்//

நன்றி துளசி கோபால் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

துளசி said...

நன்றி திகழ், பிரியமுடன் வசந்த் மற்றும் சிவாஜி சங்கர். தங்களின் தொடர்ந்த பின்னூட்டங்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன.

துளசி said...

//யாழினி said...

"இயேசு நாதர் பாவி இல்லை அவர் தன் மக்களின் பாவங்களுக்காக மரித்தார்"//

தங்களின் விளக்கம் அருமை யாழினி.

ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை. நியாயமாக பார்த்தால் பாவிகள் தானே தன்டிக்கப்பட வேண்டும், பாவிகளுக்காக இயேசு நாதர் ஏன் மரித்தார் என்பது மட்டும் புரியவில்லை.

துளசி said...

//tamiluthayam said...
உலகிலே எல்லொருமே பாவிகள். கடவுளர்களும் விதிவிலக்கல்ல.//

நல்லாயிருக்கே!!

//மனிதனின் ஒவ்வொரு தவறுக்கும் இறைவனே காரணம். பிள்ளையின் தவறுக்கு தந்தையின் வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதில்லையா//

அப்புடி போடுங்க. நேரம் கிடைச்சா கடவுளையும குற்றவாளி கூண்டுல ஏத்தாம விடமாட்டீங்க போலிருக்கே.

நன்றி தமிழுதயம் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.