குழந்தையும் தெய்வமும்

எந்தன் மனதிலே
வாழ்ந்த இறைவனே
உன்னை அறிந்ததும்
என்னை பிரிந்ததேன்?

குழந்தை வயதிலே
என்னில் உறைந்தவன்
மனித னானதும்
என்னை மறந்ததேன்?

குழந்தை தன்மைகள்
என்னை பிரிந்ததும்
கடவுள் கூடவா
என்னை பிரிவது?

அன்பு செய்ததில்
அடிமை ஆனவன்
பக்தி கொண்டதும்
பரமன் ஆவதோ?

அழுது புலம்பினேன்
கருணை இல்லையோ
கடவுள் என்றதும்
கர்வம் ஏனடா???

4 Comments:

கலையரசன் said...

//குழந்தை வயதிலே
என்னில் உறைந்தவன்
மனித னானதும்
என்னை மறந்ததேன்?//

அருமையான வரிகள்...

துளசி said...

நன்றி கலையரசன்.

Anonymous said...

//அன்பு செய்ததில்
அடிமை ஆனவன்
பக்தி கொண்டதும்
பரமன் ஆவதோ?//

அழகிய கேள்வி :)

மிக அழகான சிந்தனை :)

துளசி said...

//Mathu Krishna said...
அழகிய கேள்வி :)

மிக அழகான சிந்தனை :)//

நன்றி மது தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.