உறங்காதே மனமே

1. எழுந்திரு மனிதா! எழுந்திரு மனிதா!!
எதை நீ இழந்துவிட்டாய்?
பணமும் பதவியும் உன்னை பிரிந்தால் 
நீயேன் வருந்துகிறாய்?

உழைத்துக் கிடைத்த அறிவும் திறமையும்
உன்னிடம் உள்ளவரை
மனிதன் என்ற வார்த்தை போதும்
மறுபடி உயர்ந்திடவே . . .

பேரும் புகழும் மங்கிப் போனால்
இருளிள் மூழ்குவதோ?
நட்சத்திரமாய் மின்னும் இதுவே
வாழ்கைச் சரித்திரத்தில்.

= = = = = = = = = =

2. எழுந்திரு! எழுந்திரு!! மனிதா எழுந்திரு!!!
எதை நீ இழுந்துவிட்டாய்?
எல்லாம் இருந்தும் எதையோ இழந்ததில்
நீயேன் சோர்ந்துவிட்டாய்?

உன்னில் கலந்த உணர்வுகள் எத்தனை
ஒருகணம் எண்ணிப்பார்
தளரா உள்மனம் விலகா உன்குனம்
உன்னில் வெளிப்படுமே . . .

தடைகள் ஆயிரம் தடுத்த போதும்
உழைக்கத் தடையேது?
எல்லாம் இங்கே முடிந்த பின்பும்
முயற்சிக்கு முடிவேது.

= = = = = = = = = =

3. மனிதா! மனிதா!! எழுந்திரு மனிதா!!!
எதை நீ இழந்துவிட்டாய்?
தடைகள் ஆயிரம் தாண்டிய பின்னே
அனுபவம் பெற்றுவிட்டாய்

இலக்கை வென்று சாதனை செய்தும்
உழைக்கும் உன்னிடமே
இலக்குகள் எல்லாம் படியாய் மாறி
காலில் மிதிபடுமே . . .

எல்லை என்று எதுவும் இல்லை
வாகைச் சூரியனே
தொடரும் இந்த வாழ்கைப் பயணம்
வானம் நோக்கியதே.

= = = = = = = = = =

4. மனிதா எழுந்திரு! மனிதா எழுந்திரு!!
எதை நீ இழந்துவிட்டாய்?
எல்லாம் இருந்தும் ஏனோ நீதான்
உழைக்க மறந்துவிட்டாய்

பினமெனும் பெயரை பெறுவதற்க் குள்ளே
ஓய்வு பெறுவதோ?
பினமாய் நீயும் மாறிய பின்னே
உழைக்க நினைப்பதோ . . .

இரண்டும் இங்கே அவசிய மில்லை
சாத்தியம் இருக்குதோ?
இருந்தும் ஏனோ மனிதா . . . மனிதா . . .
சோம்பித் திரிகின்றாய்.

10 Comments:

கலையரசன் said...

//இலக்கை வென்று சாதனை செய்தும்
உழைக்கும் உன்னிடமே
இலக்குகள் எல்லாம் படியாய் மாறி
காலில் மிதிபடுமே//

அருமையான.. நான் ரசித்த வரிகள் துளசி!!

பூங்குன்றன் வேதநாயகம் said...

//தடைகள் ஆயிரம் தடுத்த போதும்
உழைக்கத் தடையேது?
எல்லாம் இங்கே முடிந்த பின்பும்
முயற்சிக்கு முடிவேது.//

நண்பரே ,

நச்சுன்னு இந்த வரிகள்.படிக்கும்போதே புத்துணர்ச்சி கிடைத்தது.வாழுத்துக்கள்!
poongundran2010.blogspot.com

ஆர்.வி. ராஜி said...

உற்சாக கவிதை மிக மிக அருமை.

//இலக்கை வென்று சாதனை செய்தும்
உழைக்கும் உன்னிடமே
இலக்குகள் எல்லாம் படியாய் மாறி
காலில் மிதிபடுமே//

இவை என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வாழ்த்துக்கள்.

திகழ் said...

அருமை

Dhass Brothers said...

ரொம்ப நல்லா இருக்கு துளசி. வாழ்த்துக்கள்.

துளசி said...

வாங்க கலை எப்படி இருக்கீங்க. நம்ப blog பக்கமும் அடிக்கடி வந்து போங்க.

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி கலை.

துளசி said...

//பூங்குன்றன் வேதநாயகம் said...

நச்சுன்னு இந்த வரிகள்.படிக்கும்போதே புத்துணர்ச்சி கிடைத்தது.வாழுத்துக்கள்!//

நச்சுன்னு ஒரு கருத்து போட்துக்கும், புத்துணர்ச்சி பொங்கும் தங்களின் வருகைக்கும் நன்றி பூங்குன்றன் வேதநாயகம்

துளசி said...

//ஆர்.வி. ராஜி said...

உற்சாக கவிதை மிக மிக அருமை.//

தங்களுடைய உற்சாகமான கருத்துக்கள் உண்மையிலேயே உற்சாகம் தருகிறது ராஜி.

துளசி said...

//திகழ் said...

அருமை//

நன்றி திகழ் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

துளசி said...

//Dhass Brothers said...

ரொம்ப நல்லா இருக்கு துளசி. வாழ்த்துக்கள்.//

நன்றி தாஸ் சகோதரர்களே.