மூரிதை*

*மூரிதை - மூன்று வரிக் கவிதை
1. மரணம்
           நல்ல உறக்கம்
           நாளும் பயிற்ச்சி
           நிலையாய் உறங்க . . .

2. அடக்கம்
           அடக்கமாய் இரு
           அறநெறி காக்க
           அடங்கிப் போகாதே . . .

3. காதல்
           கவிதைகள் பிறக்கும்
           காதல் செய்தால்
           கடமைகள் மறக்கும் . . .

4. முயற்சி
           முடிவிலே உணர்ந்திட்டான்
           முயற்சியே வெற்றியென்று
           முயலுகிறான் முயற்சிக்க . . .

5. தோல்வி
           உழைக்க மறந்ததை
           உணர மறுப்பதே
           உண்மை தோல்வியாம் . . .

6. புகழ்
           புகழொரு போதை
           புரியா மனமே
           பெருமை கொள்ளாதே . . .

7. பரிசு
           வாழ்கை போட்டியில்
           வெற்றியின் பரிசு
           வாழ்வின் மரணம்

8. ஏக்கம்
           கனவுகளிள் தொலைந்தவன்
           காலங்கள் மாறியபின்
           கனவுகளைத் தேடுகிறேன்

9. நிகழ்வு
           நிகழ்ந்ததை நினைத்து
           நெகிழும் மனது
           நிகழ்வதை வெறுக்கும்
தொடரும்...

9 Comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//முடிவிலே உணர்ந்திட்டான்
முயற்சியே வெற்றியென்று
முயலுகிறான் முயற்சிக்க . . .//

இதுதான் மிகச்சிறப்பான வரிகள் நல்லாயிருக்கு...

துளசி said...

//பிரியமுடன்...வசந்த் said...

//முடிவிலே உணர்ந்திட்டான்
முயற்சியே வெற்றியென்று
முயலுகிறான் முயற்சிக்க . . .//

இதுதான் மிகச்சிறப்பான வரிகள் நல்லாயிருக்கு...//

நன்றி வசந்த்.

எல்லா வரிகளும் சிறப்பாக அமைய முயற்சிக்கிறேன்.

தமிழ் said...

நச்சென்று உள்ளது

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

துளசி said...

//திகழ் said...

நச்சென்று உள்ளது

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்//

நன்றி திகழ்.

Jawahar said...

என்னங்க இது, சுவாரஸ்யமா படிச்சிகிட்டு வந்தா தொடரும்ன்னுட்டீங்க. முயல்வதற்கு முயற்சிக்கிறேன் ரொம்ப ரசித்தேன்.

http://kgjawarlal.wordpress.com

துளசி said...

//Jawahar said...

என்னங்க இது, சுவாரஸ்யமா படிச்சிகிட்டு வந்தா தொடரும்ன்னுட்டீங்க. முயல்வதற்கு முயற்சிக்கிறேன் ரொம்ப ரசித்தேன்.//

நினைவில் நின்றவை மனதில் தோன்றும்போது நிச்சயமாக இது தொடரும். அதனால அடிக்கடி நம்ம blog பக்கம் வந்துட்டு போங்க.

நன்றி Jawahar தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

துளசி said...

[Comment From Original Post]

பிரியமுடன்...வசந்த் said...

// கவிதைகள் பிறக்கும்
காதல் செய்தால்
கடமைகள் மறக்கும் . . .//

உண்மைதான்...

//அடக்கமாய் இரு
அறநெறி காக்க
அடங்கிப் போகாதே . . .//

மிகச்சரி

துளசி said...

[Comment From Original Post]

திகழ் said...
அருமை

துளசி said...

[Comment From Original Post]

கேசவன் .கு said...
/// கனவுகளிள் தொலைந்தவன்
காலங்கள் மாறியபின்
கனவுகளைத் தேடுகிறேன் ///

அருமையான வரிகள் ! அழகு செய்கிறது.!!