கனவுக் காதல்

நித்திரை நினைவில்
நீங்கா நிலவே
நித்திரை கலைய மறுக்கிறதே . . .

நித்திரை கலைத்த
நின்னைக் கண்டதும்
மலர்முகம் என்னில் பதிகிறதே . . .

அழகின் விளக்கம்
நீயே என்று
உள்மனம் எங்கோ சொன்னதடி . . .

உண்மை அறிந்திட
ஆவல் கொண்டதும்
இன்றும் கனவு கலைந்ததடி . . .

கனவினில் கண்டவள்
கண்களில் மலர்ந்திட
காலம் எத்தனை காக்கனுமோ !

அழகிய அவளும்
உண்மையில் இருந்தால்
இறைவன் திறமையில் சிறந்தவனே !!

2 Comments:

பிரியமுடன்...வசந்த் said...

//அழகிய அவளும்
உண்மையில் இருந்தால்
இறைவன் திறமையில் சிறந்தவனே !!//

அது முடியாதே..

மற்றபடி ரசனையான கவிதைங்க...

துளசி said...

//வசந்த் said...
ரசனையான கவிதைங்க...//

உங்களின் கருத்துக்கு நன்றி வசந்த்