கவிஞரின் வாழ்வில்...

புல்லின் அசைவிலும் கவிதை படைத்திட
கற்பனை அறிவின் உற்று நோக்கலால்
கண்கள் மறந்த இயல்புப் பார்வை . . .

இயற்கை படைப்பின் ஒவ்வொரு அனுவையும்
ரசிக்கத் துடிக்கும் மனதை வென்று
பதிவு செய்யப் பதறும் நினைவலை . . .

ஆழ்ந்த அமைதியின் நிசப்தம் கண்டும்
ஒளிந்து கிடக்கும் வரிகளைத் தேடி
சலனம் கொள்ளும் இம்சை மனது . . .

இரவுகள் எல்லாம் நிலவுடன் சேர்ந்து
கவிதை எழுதி கவிதை எழுதி
கணவுகள் தொலைத்த இரவுத் தூக்கம் . . .

எத்தனை எத்தனை இழப்புகள் என்று
அனுபவ அறிவை கடவுள் சொல்லியும்
என்மனம் பணிவுடன் இறைவனைக் கேட்டது . . .

இழப்புகள் ஆயிரம் இருந்த போதும்
படைப்பால் அவனும் கடவு ளாதலால்
நானும் ஒரு முறை கவிஞனாகவா???

2 Comments:

பிரியமுடன்...வசந்த் said...

//ஆழ்ந்த அமைதியின் நிசப்தம் கண்டும்
ஒளிந்து கிடக்கும் வரிகளைத் தேடி
சலனம் கொள்ளும் இம்சை மனது . . .//

யெஸ்..

துளசி said...

நன்றி வசந்த்.