தாயிடம் சில கேள்விகள்...

என்னைப் பெற்ற அன்புத் தாயே!
உன்னைப் போல பொறுமையும் உண்டோ
ஒரு கணம் பொறுக்கா யெந்திர உலகில்
என்னைப் பெறவே எத்தனை மாதம்
ஏங்கி ஏங்கிக் காத் திருந்தாயோ?

சகிப்புத் தன்மையின் உச்ச வரம்பே!
சிறிது துரம் உடன் சென்றாலே
சனியன் என்று சலித்துக் கொள்வர்
என்னை உன்னில் எப்படி நீயும்
சங்கட மின்றி சுமந்து சென்றாய்?

மனதில் ஒளிரும் தியாகச் சுடரே!
தன்னுயிர் காக்க மன்னுயிர் போக்கும்
மூடர் நிறைந்த மனித உலகில்
மரணம் மறந்து ஜனனம் கொடுத்து
மெழுகாய் வாழ்வது உன் குனமோ?

தன் னலமற்ற பெருந் தகையே!
தனக்கென மட்டும் வாழும் உலகில்
எனக்கென மனதில் ராஜ்ஜியம் அமைத்து
ராஜா . . . என்று அழைக் கின்றாயே
உன்னில் வாழ்வது நீயா நானா???

6 Comments:

கலையரசன் said...

நல்லாயிருக்குங்க துளசி!!

துளசி said...

//கலையரசன் said...
நல்லாயிருக்குங்க துளசி!!//

நன்றி தலைவா...

யாழினி said...

உண்மையில் நல்லதொரு கவிதை! கண்கள் பணிக்க வைக்கின்றது!

துளசி said...

//யாழினி said...
உண்மையில் நல்லதொரு கவிதை! கண்கள் பணிக்க வைக்கின்றது!//

நன்றி யாழினி,

உங்களுடைய 'நிலவில் ஒரு தேசம்' blog இல்லை என்றதும் நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டீர்களோ என்று நினைத்தேன். 'என் மன வானில்' என்ற blog-ல் மீண்டும் நீங்கள் எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

உங்களுடைய புதிய வலைதளம் மிகவும் அருமை.

Anonymous said...

Wonderful:)

துளசி said...

//Mathu Krishna said...

Wonderful:)//

Thank You Mathu.