காலத்தின் அழுகுரல்...

இந்த பூமிப்பந்து உன் விரல் நுனியில் சுற்றும் 'காலம்' வரும் என்று காத்திருக்கிறாயா? இந்த உலகத்தை எப்பொழுது உன் விரல் நுனியில் சுற்ற வைப்பாயோ என்றுதான் காத்துக்கிடக்கிறது 'காலம்'.

மலையை மடித்து, கடலை நிரப்பி சொர்கம் அமைக்கும் 'காலம்' வர ஆசைப்படுகிறாயா? அந்த மலைகளை மடிப்பவனும், கடலை நிரப்புபவனும் நீயாக இருக்கக்கூடாதா என்று ஆதங்கப்படுகிறது 'காலம்'.
 
எந்த லட்சிய புருஷரின் வருகைக்காக காத்திருக்கிறாய்? உன் எண்ணம் ஈடேறாது. பலரின் எதிர்ப்பார்ப்பிற்க்குறிய அந்த லட்சியப்புருஷரின் வருகை நடந்தேறிவிட்டது - உன் வருகையினால். நீதான் இன்னும் உணரவேயில்லை. உணரும் 'காலம்' வரும் என்று உறங்கிக் கிடக்கிறாயா? நீ எப்பொழுது உன் உண்மை நிலையை உணர்வாயோ என்றுதான் விழித்துக்கிடக்கிறது  'காலம்'.

ஒன்றை மட்டும் மனதில் கொள்: நீ காத்துக்கிடப்பதால் 'நானும்' காத்துக்கிடக்கிறேன் காலம்காலமாக....

-இப்படிக்கு 'காலம்'

0 Comments: